வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!-2024

2329

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை  (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு  அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை  இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 6.30  மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன. தொடர்ந்து காலை7.00 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.00 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 9.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. . மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று நண்பகல்  12.00 மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து  பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.