சச்சினின் காலை தொட்டு வணங்கிய யுவராஜ் சிங் : அதிர்ந்து போன அரங்கம்!!(வீடியோ)

488

Yuvaraj Singh

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த காட்சிப் போட்டியின் போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ் சிங்.

நேற்று நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஒப் தி வேல்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சிறப்பாக விளையாடிய யுவராஜ் 134 பந்துகளில் 132 ஓட்டங்கள் குவித்தார்.

அப்போது 41 ஓவரின் போது சச்சினை நோக்கி சென்ற யுவராஜ் திடீரென சச்சினின் காலில் விழுந்து வணங்கினார். உடனே கூச்சப்பட்டு போன சச்சின் யுவராஜின் முதுகுப்பகுதியை தொட்டு தூக்கினார்.

அந்த சமயத்தில் அரங்கமே அதிர்ந்து போனது. இந்த காட்சியை ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். சச்சின் எனது தாத்தா, கடவுள், குரு என யுவராஜ் கூறிவரும் நிலையில், தனது ஆதரவையும் சச்சின் யுவராஜிக்கு வழங்கி வருகிறார்.

அதே போல் 2015ம் ஆண்டு வரப் போகும் உலகக்கிண்ண போட்டிகளில் யுவராஜ் கலக்குவார் எனவும் சச்சின் கூறியிருந்தார்.

ஆனால் திடீரென யுவராஜ் சச்சின் காலை தொட்டு வணங்க காரணம் என்ன, ஒரு வேளை சச்சினை ஷரபோவா தெரியாது என கூறியதால் இவர் தான் கிரிக்கெட் கடவுள் என்பதை அவருக்கு புரிய வைக்க பதிலடி கொடுத்தாரா யுவராஜ் என்று தெரியவில்லை.