
நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியிலிருந்து 63 பெண்கள் சிறுமிகள் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பவிருந்த 300 மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
தங்களது அமைப்பினை சேர்ந்த தோழர்களை விடுவிக்கவில்லை என்றால் மாணவிகளை விபச்சார சந்தையில் விற்றுவிடுவதாக தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூ பெக்கர் தெரிவித்திருந்தார்.
இதனைதொடர்ந்து கடந்த மாதம் போர்னோ மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள தம்போவா நகரம் அருகே கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள் மீண்டும் 68 பேரை கடத்தி சென்று விட்டனர். அவர்களில் பெண்களும், சிறுமிகளும் அடங்குவர்.
இந்நிலையில் கடந்த 4ம் திகதி இராணுவத்தினருடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சென்றபோது அவர்களின் பிடியில் இருந்த 63 பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பி ஓடி சென்றுள்ளதாக இராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.





