
ஒரு பழைய கதை. தூசி தட்டி புதுக்கதையாக ஊடகங்களில் வலம் வருகிறது. அதுதான் சிம்பு, ஹன்சிகா காதல் கதை.சிம்பு, ஹன்சிகா கதையா அதான் முடிந்துவிட்டது இப்ப என்ன அதுக்கு என்று கேள்வி கேட்கிறீர்களா?
இதோ பதில்.சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கும் விழா நடத்தியது நமக்கு தெரியும். அந்நிகழ்ச்சி தொகுப்பாளினி, ப்ரியா ஆனந்திடம், விஜய் அமலாபால் கல்யாணம் முடிந்துவிட்டது. கோடம்பாக்கத்துல அடுத்த பரபரப்பான காதல் திருமணம் எது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
ப்ரியா ஆனந்தும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென, சிம்பு, ஹன்சிகா கல்யாணம் தான் என்று கூறியிருக்கிறார்.இதை கேட்டதும் சம்பந்தப்பட்ட ஹன்சிகா கோபமே படவில்லையாம்.





