வவுனியா ஓமந்தையில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

4532

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதக்கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் பிக்கப் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.