விஜய் பள்ளிவாசலுக்கு சென்றது ஏன்?

508

Vijay

கத்தி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்‘இளைய தளபதி விஜய். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் விஜய்யும் படத்தின் இயக்குனர் முருகதாஸும் அருகில் உள்ள தர்காவிற்கு சென்று தொழுகை நடத்தி வந்திருக்கின்றனர்.

நீண்ட நாட்களாக அந்த தர்காவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த விஜய்க்கு அன்று தான் செல்லும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது தான் மனநிறைவுடன் இருப்பதாக கூறியிருந்தார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.