
சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு படி மேலே கொண்டு சென்ற படம் சிங்கம். எத்தனையோ ஆக்ஷன் படம் இவருக்கு வந்திருந்தாலும் இந்த படம் தான் இவரை முழு கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களுக்கு காட்டியது.
இதன் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2வும் வெளிவந்து 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இதை அடுத்து சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிக்கயிருக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைக்கயிருக்கிறார். ஒருவேளை இது சிங்கம் 3யாக இருக்குமோ என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.





