மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

533

மட்டக்களப்பு – ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த மரணம் படுகொலையா அல்லது வேறு காரணமா என ஏறாவூர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.