சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!!

588

Nithiyanada

பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டியிருந்த நித்யானந்தாவின் வரவேற்பு சுவரொட்டிகளை கன்னட சலுவளி கட்சியினர் கிழித்து எறிந்துள்ளனர்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ‘தியான பீடம்’ ஆசிரமம் பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் உள்ளது போன்ற காணொளி ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த நேரத்தில், பிடதியில் உள்ள அவரது ஆசிரமத்தை பல்வேறு கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் சனிக்கிழமை குரு பூர்ணிமா பூஜை நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு அவரின் சீடர்கள் பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பக்தர்களை வரவேற்கும் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கன்னட சலுவளி கட்சி தொண்டர்கள் அந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளனர்.
மேலும், நித்யானந்தாவிற்கு எதிராக ஆபாச கோஷங்களை எழுப்பிய கன்னட அமைப்பினர், பனர்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.