3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!

505

SA

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டி கொக் 128 ஓட்டங்களையும், டி வில்லியர்ஸ் 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அஜந்த மென்டிஸ் தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பாக மத்திவ்ஸ் 58 ஓட்டங்களையும் சங்ககார 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இன்றைய வெற்றியின் மூலம் 2-1 என்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்டதொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக டி வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹசிம் அம்லா தெரிவுசெய்யப்பட்டார்.