வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!!

660

வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தலின் முதல் நாள் நிகழ்வு இன்று (12.05.2024) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா, வாடி வீடு மண்டபத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போதும், போரின் போதும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக முன்னாள் போராளி ஒருவரால் பொதுச் சுடர் ஏற்பட்டதுடன், மலர்தூபி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்கால் நினைவாக நினைவுப் பாடல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனிற்றா, முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், முன்னாள் போராளிகள், போராளிகள் குடும்பங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.