பாலத்தை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட வினோத பெண்!!

683

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ரோஸ் என்ற பெண் பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் பயணம் செய்து வந்துள்ளார்.

இதனை அடுத்து பிரான்ஸில் உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு யூன் மாதம் விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை என்றும் இதனால் பிரான்சில் வாழ முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

L1 L2 L3