வீதிகளில் வாகனங்களை கழுவுதல், வெற்றிலை பாக்கு மென்று துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!

677

Ajith

பொது இடங்களில் வெற்றிலை பாக்கு மென்று துப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிரதான வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள், அவற்றை வீதிகளில் வைத்து குளிப்பாட்டும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வீதிகளில் வாகனங்களை கழுவுதல், சீமெந்து குழைத்தல், வீதிகளில் நெல் உலர்த்தல் போன்றவையும் பொலிஸ் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.