
இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் கடந்த மாதம் பந்துவீச்சில் ஈடுபட்ட போதே நடுவர்கள் அவரின் இடதுமுறை பந்துவீச்சு எல்லைமீறிய அளவில் இருப்பதாக முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில் சச்சித்ரவின் பந்துவீச்சில் திருத்தவேண்டிய விடயங்களில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் நிசாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக சர்வதேச கிரிக்கட் சபை சச்சிதரவை பந்துவீச்சில் தடைசெய்தபோது தமது எதிர்ப்பை இலங்கை கிரிக்கட் வெளியிட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக சச்சித்ர சர்வதேச கிரிக்கட்டில் விளையாடியபோதும் எவரும் அவரின் பந்துவீச்சில் குறைகாணவில்லை என்று இலங்கை கிரிக்கட் முதலில் தெரிவித்திருந்தது.
எனினும் நேற்று சர்வதேச கிரிக்கட் சபையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கட் அறிவித்தது.
சச்சித்ர 39 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்று 40 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 20- 20 போட்டிகளில் பங்கேற்று 300 ஒட்டங்களுக்கு 18 விக்கட்டுக்களை அவர் கைப்பற்றியுள்ளார்.





