இறந்த குழந்தை கண் விழித்த அதிசயம்!! (வீடியோ)

498

Baby

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை ஒன்று இறுதி சடங்கில் கண்விழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பயபாஸ் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டதால்,அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டதாக கடந்த 11ம் திகதி மருத்துவர்கள் அறிவித்ததால், அதன் பெற்றோர்கள் கண்ணீர் வெள்ளத்தில் ழூழ்கினர்.

இதனையடுத்து குழந்தையின் சடலத்தை எடுத்து சென்ற அவரது பெற்றோர், அதனை அருகாமையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் அடக்கம் செய்ய ஜெபக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அடக்கம் செய்யும் ஊழியர், சவப்பெட்டியை மூடி திறக்கையில், குழந்தையின் தலை லேசாக திரும்பியுள்ளது.மேலும் மெதுவாக அது தனது கண்களை விழித்து, மீண்டும் மூடிக் கொண்டுள்ளது.

இந்த அதிசயத்தை பார்த்த அந்நபர், குழந்தையின் தந்தையிடம் விடயத்தை கூறியபோது, உடனடியாக குழந்தையை அன்புடன் அரவணைத்த அவரின் தந்தை அதை மற்றொரு நவீன மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தை , காய்ச்சலின் வீர்யத்தால் ‘கோமாட்டோஸ்’ என்னும் மயக்க நிலைக்கு சென்று விட்டாதாகவும், இதை புரிந்துக் கொள்ளாத மருத்துவர்கள் அது இறந்துப் போய் விட்டதாக தெரிவித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.