தாயை தாக்கிய மின்னலால் கம்பி போல் காட்சியளிக்கும் குழந்தையின் தலை முடி!!

562

Child hair

மெக்சிகோவில் பெண்மணி ஒருவர் கர்ப்பமாக இருக்கும் போது அவரை மின்னல் தாக்கியதால், அவருக்கு பிறந்துள்ள குழந்தையின் முடி கம்பி போன்று நிமிர்ந்து வளர்கிறது.

மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு யூலை மாதம் 4 ம் திகதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கியுள்ளனர்.

வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது வில்லியனுவாவை மின்னல் தாக்கியதில், அவரது உடலில் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழியாக வெளியேறி ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது.

மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு நரம்பியல் சேதம் ஏற்பட்டு உள்ளது.

மேலும், குழந்தை பிறந்து ஒருவடருடமாகியும் குழந்தையின் தலைமுடி கம்பிபோல் நேராக நிற்கிறது. அதற்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை எடுத்தும் முடி கம்பிபோல் வளர்கிறது.
இது எங்களுக்கு அதிர்ஷ்ட குழந்தை என பெற்றோர்கள் கூறுகின்றனர்.