நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரமித தென்னகோன் தெரிவித்தார்.
அந்தந்த பகுதிகளில் 116 பாதுகாப்பு மையங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.