9A எடுத்த மாணவனை தீவைத்து எரித்த நபர் தப்பியோட்டம்!!

924

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற மாணவனை தீவைத்து எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பல்லேகல – தும்பர சிறைச்சாலையில் இருந்த நிலையில் சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளார்.



சந்தேகநபர் நேற்று மாலை 5 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.