மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : குறைக்கப்படும் மின் கட்டணம் : அமைச்சர் அறிவிப்பு!!

401

எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் வில 20 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



இந்த கட்டணக் குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைத்துள்ளது.