நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

1092

Nithiyanada

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, அவருக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக பொலிசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதையேற்ற ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாது என்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்ம் கேட்டுக்கொண்டார்.

எனவே செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரணையை தொடங்கியது.
விசாரணை முடிந்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது.

நித்யானந்தாவை பொலிஸ் காவலில் எடுத்து ஆண்மை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், வரும் 28ம் திகதி முதல் இந்த வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றம், சாட்சியங்களிடம் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.