வயிற்றில் இருந்த கால்பந்து எடையுள்ள கட்டியை நீக்கி மருத்துவர்கள் சாதனை!!

600

சீனாவில் சிறுமி ஒருவருக்கு வயிற்றில் இருந்து 33 பவுண்டுகள் எடையுள்ள கட்டியை நீக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ஹேலொங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஹான் பிங்பிங் (11) என்ற சிறுமி, தனது வயிற்றில் 33 பவுண்டுகள் எடையுள்ள கட்டியால் அவதிபட்டு வந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களில் 2 கால்பந்து போல் பெரிதாகிய இக்கட்டி, கடந்த யூன் மாதம் 18ம் திகதி வரையில் ஹானின் வயிற்றில் 6ல், 5 பகுதியாக இடம்பிடித்திருந்தது. மேலும் இந்த கட்டி அவரின் உடல் உறுப்புகளை நொறுக்க தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து ஹான் 2500 மைல்கள் பயணம் செய்து குவாஞ்சோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள அவருக்கு, மருத்துவர்கள் 8 மணி நேர சிகிச்சைக்கு பின் ஹானின் கட்டியை நீக்கியுள்ளனர்.

மேலும், இந்த சிகிச்சைக்காக ஜூக்செங் மருத்துவ கவனிப்பு நிறுவனம் 11.000 பவுண்டுகள் நிதி திரட்டியுள்ளது.

B1 B2 B3 B4 B5