பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமிகள் : குற்றச்சாட்டு இன்றி தப்பித்த சந்தேகநபர்!!

441

பிரித்தானியாவின் விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து மோசமான முறையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக விபத்து ஏற்படுத்திய லேண்ட் ரோவர் காரை ஓட்டிய 46 வயது பெண் கிளாரி ஃப்ரீமண்டில்(Claire Freemantle) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.



விபத்து தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், 46 வயதான பெண் ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் ஏற்படுத்தியது” தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரால் கடும் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 2 சிறுமிகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மேலும் ஆழமான விசாரணை வேண்டும் என்றும் விமர்சித்துள்ளனர்.

ஒரு அறிக்கையில், தங்கள் மகள்களின் மரணத்திற்கு ஓட்டுநரின் அலட்சியமான செயலே காரணம் என்று பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.