
தமிழ் திரையுலகை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் தனுஷ். மிகவும் எதார்த்தமாக, பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால், இவரை எல்லோருக்கும் எளிதில் பிடித்துவிடும்.
ஆனால் சமீபத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியாக அமைய, எப்படியாவது ஒரு வெற்றி கொடுக்கவேண்டும் என்று போராடிக்கொண்டிருந்தார். அதற்கு ஏற்றார் போல் நேற்று திரைக்கு வந்த இவரின் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சந்தோஷத்தை இவர் தனது டுவிட்டர் பகுதியில் ‘ நீங்கள் கொடுத்த இந்த வெற்றியை, என்னால் வார்த்தையால் சொல்ல இயலாது, அதற்கு பதிலாக என் கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.





