
நடிகர் காதல் தண்டபாணி மாரடைப்பால் நேற்று காலமானார். காதல் படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான இவர் அப்படத்தை தொடர்ந்து இங்கிலீஷ்காரன், சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, மலைக்கோட்டை, வேலாயுதம், வருத்தப்படா வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு மரணத்திற்கு திரையுலகினர் பலரும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.





