
தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, அருணாச்சலம் போன்ற படங்களின் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாகியவர்.
ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவரை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஐதராபாத்தை சேர்ந்த பல்லவி என்ற பெண், எனது கணவரும் அவரது உறவினர்களும் எனது பெற்றோரிடம் இருந்து அதிக வரதட்சணை வாங்கி தரும்படி வற்புறுத்தி என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனது புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என சில தினங்களுக்கு முன் ஐதராபாத் நீதிமன்றத்தில் பல்லவி மனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து போலிஸார் இவர்கள் குடும்பத்தின் மீது விசாரனை நடத்தப்போவதாக தெரிகிறது.





