
இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் மர்வன் அத்பத்துவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் நிறைவடையும் வரை அவரின் பதவிக்காலம் அமுலில் இருக்கும்.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போல் பாப்ரேஸ் தீடீரென விலகியதை அடுத்து பிரதான பயிற்றுவிப்பளராக மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.





