பாலாவால் வரலட்சுமிக்கு வந்த சோகம்!!

443

Bala

பாலா என்றாலே வித்தியாசம், தனித்துவம் வாய்ந்த கதை என இப்படி செல்லிக் கொண்டே போகலாம். அவர் இயக்கத்தில் நடிக்க விரும்பாத நடிகர், நடிகைகளே இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர் படத்தில் நடித்தால் சம்பளம் ஏறும், செல்வாக்கு ஏறும், ரசிகர்களின் எண்ணிக்கை ஏறும், நடிப்பால் புகழ் வரும்.

தற்போது பாலா இயக்க இருக்கும் திரைப்படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் சசிக்குமார் நடிப்பதாக ஏற்கெனவே முடிவாகிவிட்டது. பின் இப்படத்தில் நாயகியாக யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்புக்கிடையில் வரலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார் பாலா.

இந்த செய்தி வரலட்சுமியின் ரசிகர்களான சினிமா ஹீரோக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியை இப்போது துன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறார் பாலா. படத்தில் கரகாட்டக் கலைஞராக வரலட்சுமி நடிக்கிறார் என்று தான் நாம் நினைத்தோம்.இல்லையாம், அவர் ஒரு விபச்சாரியாக சித்தரிக்கப்படுகிறாராம்.

பாலா படத்தில் எவர் நடித்தாலும், அந்த கரக்டராகவே அவர்களை மாற்றி விடுவார். இந்த விபச்சாரி கரக்டரில் வரலட்சுமி நடித்தால், அவரை பார்க்கும்போதெல்லாம் என்ன தோன்றுமோ என்று கண்கலங்குகின்றனர் வரலட்சுமி சம்பந்தப்பட்டவர்கள்.