சந்தோஷத்தில் துள்ளும் சிம்பு!!

511

Simbu

தல அஜித்தின் தீவிர ரசிகன் என்று தன்னை எப்போதும் கூறிக் கொண்டு வருபவர் சிம்பு. இவர் கௌதம் மேனனை அனுகி எனக்கு தலயுடன் இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

இதற்கு கௌதம் மேனன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, சிம்புவிடம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைப்பது கஷ்டம், வேண்டுமென்றால் ஒரு பாடலில் தல அஜித்துடன் ஒரு காட்சியில் ஆடுவது போன்று அமைக்கலாம் என்று கூறியுள்ளாராம் கௌதம் மேனன்.

சிம்புவும் எப்படியோ தலயுடன் படத்தில் தோன்றினால் போதும் அதுவே சந்தோஷம் என்று ஒப்புக் கொண்டாராம்.இதனால் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளுகிறாராம் சிம்பு.