வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர வருடாந்த அலங்கார உற்சவம்!!

727

Koomankulam

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவமானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் 30.07 அன்று நிறைவடையவுள்ளது.

தினமும் காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையும் மாலை 7 மணிக்கு உற்சவமும் நடைபெறவுள்ளதுடன், தினமும் மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசையும்( அன்னதானம்) நடைபெறவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

-பாஸ்கரன் கதீசன்-