டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக பரபரப்புத் தகவல்!!

472

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் மிக சிறந்த அணித்தலைவராக விளங்கும் டோனி T20 உலகக்கிண்ணம் மற்றும் 50 ஓவர் உலகக்கிண்ணம் ஆகியவற்றை பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, T20 ஆட்டம் ஆகிய 3 நிலைகளிலும் அணித்தலைவராக இருந்து இந்திய அணியை திறம்பட நடத்தி வருகிறார்.

அண்மையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் 28 ஆண்டுக்கு பிறகு அவரது தலைமையிலான அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விகல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலக டோனி திட்டமிட்டு இருப்பதாகவும், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு அவர் டெஸ்டில் இருந்து விலகும் முடிவை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.