
கிங் கங்கையில் நீராடச்சென்ற போது காணாமல்போன மாணவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ, கடஹிங்கல பகுதியை சேர்ந்த ஜனிது சுரேந்திரா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு அருகே உள்ள ஜிங் கங்கையில் குளிக்க சென்றார்
இதன்போது, ஆற்றைக் கடக்க முற்பட்ட போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். காணாமல்போன மாணவனைக் கண்டுபிடிக்க நெலுவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





