வவுனியா நகர்ப் பகுதியில் “ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்” எனக்கோரி கையெழுத்து இடும் நிகழ்வு!!

653

வவுனியா நகர்ப் பகுதியில் “ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்” என தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் இன்று (25.07) கையெழுத்து இடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அனைத்து இனவாதங்களையும் தோற்கடிப்போம், இனவாத, மதவாத வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை அழுல்படுத்து, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சோசலிசம் எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை நகர்ப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பதாதையொன்றில் பொது மக்கள் கையெழுத்து இடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பொது மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டடிருந்தனர்.

 

11 12 13