தேவை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் : வெளியானது அறிவிப்பு!!

1198

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில்

மேலும், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.