
கிளிநொச்சியில் உள்ள பளை, ஆனையிறவு சோதனைச்சாவடியில் இன்று காலை மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது 4 கிலோ 40 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் முல்லைத்தீவு, திருமுருண்டி பகுதியைச் சேர்ந்த 18, 25 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





