தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!!

668

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த ஜூட் வசீகரன் டிவோன்சி என்ற மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியை சேர்ந்த குறித்த மாணவி, 18 வயதுக்குட்பட்ட 60-65Kg எடைப்பிரிவில் தங்க பதக்கத்தினை வென்றுள்ளார்.

குறித்த மாணவி கடந்த மாதம் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் வெண்கல பதக்கத்தினையும் பெற்றிருந்தார்.

முல்லைத்தீவு மாணவர்கள்

அத்துடன், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் ஒருவர் 20 வயதுக்குட்பட்ட 70-75Kg எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார்.

குறித்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர் தேசிந்தனின் பயற்றுவிப்பில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.