பிரதமரை காண காத்தான்குடியில் இருந்து சைக்கிளில் வந்த மாணவி!!

412

மட்டக்களப்பு – காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)காலை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரியே மாணவி மகஜரை பிரதமரிடம் கையளித்துள்ளார்.