அறுகம்பைக்கு செல்ல வேண்டாம் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியா, ரஸ்யாவும் எச்சரிக்கை!!

106

அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்வதனை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.

அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.

அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதால் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.



இதேவேளை, அறுகம்பை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.