லண்டனில் பல மாதங்களாக காணாமல் போயுள்ள தாய் மற்றும் மகன் : உதவி கோரும் பொலிஸார்!!

294

லண்டனில் சுமார் 142 நாட்களாக காணாமல் போயுள்ள பெண் ஒருவர் மற்றும் அவரது 7 வயது மகன் விவகாரத்தில் அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு லண்டனில் ரிச்மண்ட் பகுதியை சேர்ந்த 43 வயது கரிமா மஹ்மூத் என்னும் பெண் மற்றும் அவரது 7 வயதான மகன் அடம் க்லான்வில் ஆகியோர் கடந்த ஜூன் 3ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இருவரையும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதன் காரணமாக, அந்த பெண் தொடர்பில் ஒரு புதிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.



மேற்கு லண்டனில் ஃபெல்தாம் பகுதியில் அமைந்துள்ள பெட்ஃபோன்ட் சாலைக்கு அருகில் குறித்த குறித்த பெண்ணை கடைசியாக சிலர் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறிப்பிட்ட பகுதியில் அவரை யாரேனும் எதிர்கொண்டாலோ அவர்களுக்கு உதவும் வகையில் வாடகைக்கு அறை அளித்தாலோ அவர்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், அவரை தேடும் பணியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.