வவுனியா வளாகத்தில்(யாழ். பல்கலைக்கழக) மாணவர்கள் மோதலால் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

807

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று காலை இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைநெறி பீடத்தின் 2ம், 3ம் வருட மாணவர் குழுக்களுக்கிடையிலே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதல் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பதற்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக வவுனியா வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12 13 14