வவுனியா மகாறம்பைக்குளம்-ஸ்ரீராமபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நள்ளிரவில் தோன்றிய கண்ணன் சிலை : மக்கள் வியப்பு!!(படங்கள்)

652

வவுனியா மகாறம்பைக்குளம்- ஸ்ரீராமபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று (27.07) நள்ளிரவில் மூன்று அடி கண்ணன் சிலை ஒன்று திடீர் என தோன்றியதால் மக்கள் வியைப்படைந்துள்ளனர்.

நேற்று இரவு வரை இச் சிலை அங்கு காணப்படவில்லை எனவும் நள்ளிரவில் இச் சிலை திடீர் என தோன்றியுள்ளதாகவும், காலை தாம் கோவிலுக்கு சென்று பார்த்தபோது இச் சிலை அங்கு காணப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் பற்றி அறிந்த மக்கள் பலரும் வியப்புடன் இச் சிலையை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பொலிசாருக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சிலை தானாக தோன்றியதா? அல்லது யாராவது கோவிலில் கொண்டுவந்து வைத்தார்களா என உறுதிப்படுத்த முடியவில்லை. நாடெங்கிலும் சிலைகள் காணாமல் போகும் நிலையில் இவ் ஆலயத்தில் சிலை தோன்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

-படங்கள் மதுஜன்-

23 24 25 26