பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழர்!!

844

Gold

தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ், பொதுநலவாய போட்டியில், பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த 22 வயதாகும் சதீஷ் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய பொதுநலவாய சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சதீஷின் சாதனையைப் பாராட்டி அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், தமிழக அரசு சார்பில் 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.