மன்னாரில் இடம்பெற்ற சோகம் : மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு!!

994

மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலை (06.12.2024) விபரீதமுடிவால்உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் ச – நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.