
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பயணிகள் பஸ்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரை கைது செய்வதற்காக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 4வது மைல் கல் பகுதியில் நேற்றிரவு 10.15 அளவில் இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா டிப்போவுக்கு சொந்தமான பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு பேர் பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பஸ்ஸின் சாரதியான வேப்பங்குளம் – மன்னார் வீதியை சேர்ந்த திருமணி திருச்செல்வம் புத்தளம் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம், யார் தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடடுள்ளனர். புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





