இங்கிலாந்திடம் படுதோல்வியடைய காரணம் என்ன : டோனி!!

480

Dhoni

இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மோசமான தோல்வியை கொடுத்தது.

இந்த மோசமான தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், நாங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை. மொயீன் அலி நன்றாகவே பந்து வீசினார். இருந்தாலும் அவரை நன்றாக வீச அனுமதித்தோம்.

அதே போல் சுழல்பந்து வீச்சாளருக்கு எதிராக நல்லதொரு அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். சில விக்கெட்டுகள் மென்மையான முறையில் விழுந்தன. பெரிய விக்கெட்டுகள் விழும்போது அது ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுகிறது.
நேற்று அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் ஆட்டம் வித்தியாசமாக இருந்திருக்கும்.

5வது பந்துவீச்சாளரை எப்போதும் பயன்படுத்தியதில்லை. அதனால் துடுப்பாட்டக்காரர்களை அதிகப்படுத்தி அதில் ஓரிருவரைப் பந்து வீசச் செய்வது என்று முடிவெடுத்தோம். 4 பந்துவீச்சாளர்களைக் கொண்டு வீசினாலும் வேகப்பந்து வீச்சிற்கு அதிக உதவி இல்லாத இத்தகைய ஆட்டக்களங்களில் பொறுமை அவசியம்.

எப்போதும் வெளியே பந்தை வீசச் செய்து துடுப்பாட்டக்காரர் தவறு செய்வார் என்று காத்திருப்பது பெரிய சோர்வை ஏற்படுத்துகிறது.
இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து மீள்வது கடினம் என்று தான் நினைக்கிறேன்.

கண்டிப்பாக இந்திய அணியின் திறமையை வைத்துப் பார்த்தால் நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பெற முடியும். அடிக்கக்கூடிய இடத்தில் பந்து விழும்போது தன்னம்பிக்கையுடன் அடித்து ஆட வேண்டும்.

விக்கெட் விழுந்தால் கவலைப்படக்கூடாது. ஏனெனில் கிரிக்கெட் என்பது என்ன ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகள் தான் அதில் பேசப்பட போகிறது என்று கூறியுள்ளார்.