விமானியின் சாதுர்யத்தால் மயிரிழையில் 167 பயணிகள் உயிர் தப்பினர்!!

819

MH136

மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பிய நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் எடிலைட் விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றுமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.

சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் MH136 விமானத்தில் 167 பயணிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.