ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான கொடுப்பனவு நிறுத்தம் : சர்வதேச கிரிக்கெட் சபை அறிவிப்பு!!

517

ICC

இலங்கை உட்பட்ட ஏனைய உறுப்பு நாடுகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அனுசரணையாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையே இதற்கான காரணம் என்று சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஜூலை மாத முடிவுக்கு முன்னர் 1.056 மில்லியன் ரூபாய்கள் கிடைத்திருக்க வேண்டும்.

எதிர்வரும் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலக கிண்ண போட்டிகளுக்காக இந்த கொடுப்பனவு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு வழங்கப்படவிருந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆசிய கிண்ணத்திடம் இருந்து 528 மில்லியன் ரூபாய்கள் கிடைக்க வேண்டியிருந்தது. எனினும் 198 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே ஆசிய கிரிக்கெட் சபையினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்டதது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் இருந்து எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாரிய நிதிமுடக்கலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.