வவுனியா பிரதேச எழுத்தாளர்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில்!!

694

தமிழகத்தைச் சேர்ந்த மணிமேகலைப் பிரசுரம் , ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் , வவுனியா பிரதேச எழுத்தாளர்களுக்குமான சந்திப்பு நேற்று (01.08.2014) அன்று மாலை வவுனியா வைரவ புளியங்குளம் மதுரா மண்டபத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறும்படத் துறை சார்ந்த பல்வேறு படைப்பாளர்களும் பங்கு கொண்டனர். ஈழத்து படைப்பாளிகளின் எழுத்துக்களை நூலுருவாக்கம் செய்வதனை அடிப்படையாகக் கொண்ட சந்திப்பாகவே இச் சந்திப்பு அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

11 12 13 14 15