வவுனியாவில் 4 வயது சிறுமி ஆட்டோ சாரதியால் பாலியல் பலாத்காரம்!!

603

Abuse

வவுனியாவில் 4வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியை ஆட்டோசாரதி ஒருவர் பாலியல் பாலக்காரம் செய்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பிரிவில் முறையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆட்டோ சாரதியை தேடிவந்த வவுனியா பொலிசார் குறித்த ஆட்டோ சாரதியை கடந்த புதன்கிழமை கைது செய்து நேற்று முன்தினம் (31.07) வவுனியா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இதனையடுத்து சந்தேக நபர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.