
அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தின் விளம்பரம் தினசரி பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டர்களில் அமிர்கான் மிக ஆபாசமாக காட்சியளித்திருந்தார்.
இப்படம் வெளியான சில மணி நேரங்களிலே இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர் மனோஜ்குமார் என்பவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கோடிக்கான மக்கள் வாசிக்கும் தினசரி செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட காட்சிகள் வந்திருப்பது, சிறுவர்களையும், இளைஞர்களையும் தவறாக வழிநடத்தும் என்று கருதுகின்றேன் என்று கூறியுள்ளார்.
அமிர்கான் மீது மட்டும் அவர் வழக்கு தொடுக்காமல், இப்படத்தின் தயாரிப்பாளரான விது வினோத் சோப்ரா மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





