ஓடும் புகையிரதத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற 20 வயதுப் பெண் : அடுத்து நேர்ந்த துயரம்!!

585

இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்ரதா பெஹெரா (20). இவர் தனது தோழிகளுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

ரயில் சென்றுகொண்டிருந்தபோது நம்ரதா செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து நம்ரதாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.